தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி சார்ள்ஸ் பதவி துறப்பு!

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியைத் துறந்துள்ளார். இதேநேரம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவாவும் பதவி விலகுவார் என்று எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருமதி சார்ள்ஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை விண்ணப்பங்கள் மூலம் கோரவுள்ளதாக நேற்றுக்கூடிய கன்னியமர்வில் அரசமைப்பு பேரவை தீர்மானித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்