தேர்தலுக்கு பணம் வழங்குவது மத்திய வங்கியின் வேலையல்ல-மத்திய வங்கி ஆளுநர்

வரிகளை உயர்த்துவதற்கும் தேர்தலுக்கு பணம் வழங்குவதற்கும் நிதியமைச்சும் திறைசேரியும் முழுப்பொறுப்புடையவை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என தெரிவித்த அவர், நாட்டின் நிதிக் கொள்கையையே மத்திய வங்கி அமுல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

வரியை உயர்த்துவதும், தேர்தலுக்கு பணம் வழங்குவதும் நாடாளுமன்றம், அமைச்ச ரவை மற்றும் நிதி அமைச்சின் வேலை என்றும், நிதிக் கொள்கை உள்ளிட்ட வரிக் கொள்கையை அவர்கள்தான் செயற்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்