சாள்ஸ் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்- மக்கள் விடுதலை முன்னணி சந்திரசேகரன் குற்றச்சாட்டு!

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பிஎஸ்எம் சாள்ஸ் பதவி விலகியமை   நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் . எதிர்வரும் மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் ரணில் ராஜபக்சவினர் தேர்தலை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என கங்கணம் காட்டியுள்ளனர்.

அதன் ஓர் அங்கமாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சாள்ஸ் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான தேர்தலை தடுப்பதற்காக அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டுள்ளார் என வெளிச்சமாக தெரிகிறது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் அனைத்தும் நிறைவடைந்து பிரச்சார நடவடிக்கைகளில் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் நாடு முழுவதும் இடம் பெற்று வருகிறது.

இவ்வாறான நிலையில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சாள்ஸ் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தது சந்தேகங்களை உறுதி செய்வதாக அமைகிறது.

பதவி விலகிய ஆணைக் குழு உறுப்பினர் சார்ஸ் வட மாகாணத்தின் முன்னால் ஆளுநராக சுங்கத் திணைக் களத்தின் பணிப்பாளராக அரசாங்க அதிபராக பல்வேறு பதவி நிலைகளை வகித்த ஒருவர் இவ்வாறு செயல்படுவது அவர் வகித்த பதவிகள் அரசியல் நோக்குடன் வழங்கப்பட்டதாக என்ற கேள்வியும் எழுகிறது.

நாட்டு மக்கள் தேர்தல் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில்  தேர்தலை நடத்துவதை தடை செய்யும் நோக்குடன் திடீரென பதவி விலகுவது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.

ரணில் ராஜபக்ச அரசாங்கம் தொடர்ந்து மக்களை பொருளாதார ரீதியில் துன்புறுத்தி வரம் நிலையில் நாட்டு மக்கள் ஜனநாயக தேர்தல் ஒன்றை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஆகவே ராணில் அரசாங்கம் உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலை  எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் காய் நகர்த்தி வருகின்ற நிலையில் அரசு உயர் பதவிகளை வகித்தவர்கள் சலுகைகளுக்காக விலை போவது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.