தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி தொகுதிக் கிளையின் வேட்பாளர் அறிமுக கூட்டம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் (ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி) யாழ்.சாவகச்சேரி தொகுதிக் கிளையின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று இடம்பெற்றது.

நேற்று பிற்பகல் 5 மணிக்கு யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கூட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவநாதன் நவீந்திரா(வேந்தன்), தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா, செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்