20கிராம் கஞ்சாவுடன் கைதானவருக்கு விளக்கமறியல்.

சாவகச்சேரி

தென்மராட்சி-கெற்பேலிப் பகுதியில் 20.3கிராம் கஞ்சாவுடன் கைதான நபரை எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதவான் திரு.யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.
21/01 சனிக்கிழமை பிற்பகல் சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் 45வயதான நபர் ஒருவர் 20கிராம் 300மில்லிக்கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் மதுவரிப் பொறுப்பதிகாரி வே.ரஷிகரன் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கைதான சந்தேக நபர் நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு 14தினங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்