விக்டோரியா நியூலண்ட் அடுத்த வாரம் இலங்கை விஜயம்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நியூலண்ட் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை, மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு அமெரிக்க ஆதரவை வழங்குவதில் அவர் கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவிச் செயலாளரின் இலங்கை விஜயத்தின் போது இலங்கை மற்றும் அமெரிக்க உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவு விழாவும் நினைவு கூரப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கை தவிர, நேபாளம், இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்