மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நானுஓயா தோட்டத்திற்கு அண்மித்த பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சடலத்தின் அருகில் பணப்பை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்