தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு கொலைமிரட்டல் – விசாரணை நடத்த நீதிமன்ற உத்தரவு

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டலுடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கம் குறித்து விசாரணை நடத்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளன தொலைபேசி அழைப்புகள் மூலம் அச்சுறுத்தலுக்குள்ளான ஆணைக்குழு உறுப்பினர்கள் எஸ்.பி. திவாரட்ன மற்றும் கே.பி.பி. பத்திரன ஆகியோர் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமைய தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம்.மொஹமட்டின் வீட்டிற்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு அவருக்கும் தொலைபேசி மூலம் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அவர் முறைப்பாடளித்துள்ளார்.
ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எஸ்.பி. திவாரட்ன மற்றும் கே.பி.பி. பத்திரன ஆகியோருக்கு ஒரே தொலைபேசி இலக்கத்தில் இருந்தே உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கவனம் செலுத்தியுள்ளனர்.

இதனிடையே ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக பி.எஸ்.எம் சார்ள்ஸ் அனுப்பி வைத்த கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பை பெப்ரவரி மாத நடுப்பகுதியில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.