அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான சமாதானம்,நல்லிணக்கம் தொடர்பான விழிப்பூட்டும் கலந்துரையாடல்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான சமாதானம்,நல்லிணக்கம் தொடர்பான விழிப்பூட்டும் கலந்துரையாடல் நிகழ்வு சமாதானமும்,சமூகப்பணியும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்முனை எஸ்.எல்.ஆர் தனியார் விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29)காலை முதல் மாலை வரையும் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடல் நிகழ்வில்  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை மற்றும்,ஊடகத்துறைக்கான பொறுப்பான முதனிலை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா,சமாதானமும்,சமூகப்பணியும் நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் ரீ.தயாபரன்,முகாமையாளர் ரீ.இராஜேந்திரன்,இணைப்பாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ் மற்றும் ஊடகவியலாளர்கள்,இளைஞர்கள்,சமூக ஆர்வலர்கள்,பெண்கள் கலந்துகொண்டார்கள்.

இதன்போது ஊடக தர்மமும் ஊடக ஒழுக்கமும்,ஊடகத்துறையின் நல்லிணக்கமும் மீள் ஒழுக்கமும் எனும் தலைப்பில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை மற்றும் ஊடகத்துறையின் முதனிலை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா விரிவுரையினை நிகழ்த்தினார்.இதன்போது வறைமுறையற்ற சமாதானத்தை தொடர்ச்சியாக நாட்டிலே ஏற்படுத்தல்,சமாதானத்திற்கான சமூகநலச் செயற்பாடுகள்,குடும்பம் முதல் அரசாங்கம் வரையும் முறையாக நல்லிணக்கம் பேணப்படுதல்,நாட்டிலே நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்தை ஏற்படுத்தல்,மக்களின் மனங்களை வெல்லக்கூடிய வகையில் ஊடகங்கள் எவ்வாறு? செயற்பட வேண்டும்,மற்றும் ஊடகவியலாளர்களின் திறன்விருத்தி,மனநிலை மாற்றம்,ஆளுமை விருத்தி,நல்லிணக்கம் பேணுதல் விடயங்கள் இதன்போது விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டது.

இங்கு
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை மற்றும்,ஊடகத்துறைக்கான பொறுப்பான முதனிலை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா கருத்து தெரிவிக்கையில்…ஊடகத்துறையானது ஊடகத்தர்மத்தை முறையாக கடைப்பிடித்தால் இந்த நாட்டின் இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் எட்டப்பட்டிருக்கும்.சமூகத்தில் சமாதான மாற்றங்கள் ஏற்படவேண்டுமாயின் அரசாங்க உத்தியோகஸ்தர்களும்,அரசியல்வாதிகளும் நல்லிணக்கம் பற்றி பேசுவதற்கு முன்வரவேண்டும் எனத்தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.