இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 100 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்படும்..

யாழ்ப்பாணத்தில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பொதுமக்களின் காணிகளை பெப்ரவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகளுக்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார் .

மேலும் தெல்லிப்பளை மற்றும் வசாவிலானில் விடுவிக்கப்படுவதற்கு ஒதுக்கப்பட்ட காணிகளை அடையாளம் கண்டு வருவதாகவும் வியாழக்கிழமை இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் காணி விடுவிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அடையாளம் காணப்பட்ட காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்