சுதந்திர தினத்தையொட்டி விசேட கண்காட்சி – அனுமதி இலவசம்

75 ஆவது சுதந்திர விழாவையொட்டி, தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம், மத்திய கலாசார நிதியம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் அருங்காட்சிய திணைக்களம் ஆகியவை இணைந்து கண்காட்சியொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளன.
எதிர்வரும் பெப்ரவரி 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் தேசிய அருங்காட்சியகத்தில் குறித்த கண்காட்சியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அரிய பல விடயங்களை மக்களுக்கு கண்டுகொள்ளமுடியுமென பௌத்த சமய அலுவல்கள் மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்தார். இந்த கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.