வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடும் சிறுநீரக நோயாளிகள்

அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லாததால் சிறுநீரக நோயாளிகள் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என ரஜரட்ட சிறுநீரக பாதுகாப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக, அண்மைக்காலமாக நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

மருந்து தட்டுப்பாடு குறித்து அரசுக்கு தொடர்ந்து தெரிவித்தும் முறையான பதில் கிடைக்காத பின்னணியில், கடந்த 26ஆம் திகதி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். இவ்வாறானதொரு பின்னணியில் ரஜரட்ட சிறுநீரக அறக்கட்டளை நேற்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

ரஜரட்ட சிறுநீரக பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் ஜே.பி. வர்ணசூரியன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;

“மருந்து வாங்க இரண்டு மூன்று நாட்கள் போக வேண்டும்.. போகும்போது மறுநாள் வரச் சொல்கிறார்கள்.. மூன்றாவது நாள் செல்ல எமது மக்களிடம் பணம் இல்லை.. மருந்தகங்களில் மருந்து வாங்கச் சொல்கிறார்கள். விலை உயர்ந்ததால் யாரும் மருந்து வாங்கமுடியாமல் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. நீண்ட காலம் வாழ்ந்திருக்கக்கூடிய நோயாளிகள் இறக்கின்றனர். இது தொடர்ந்தால், ஒரு மாதத்தில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே இறந்து விடுவார்கள்.”

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்