வருமானம் குறைந்தவர்களுக்கே அதிகரித்த வரி சென்றடையும் – நிதி இராஜாங்க அமைச்சர்!

அரசின் வருவாயை அதிகரிக்க உயர்த்தப்பட்ட வரி வீதங்கள் மக்களைப் பாதித்துள்ளதை தங்கள் அறிவதாகவும், பொருளாதாரப் பின்னடைவில் இருந்து நாடு மீளும் பொழுது வரி விகிதங்கள் மீள்பரிசீலனை செய்யப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடன் வழங்குனர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமையவே வரி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போது அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு கூறியுள்ளார்.

வருமானம் குறைந்தவர்களுக்கு செல்லும் வரி

 

வருமானம் குறைந்தவர்களுக்கே அதிகரித்த வரி சென்றடையும் - நிதி இராஜாங்க அமைச்சர்! | High Incomer Tax Give To Low Incomer Lk Tax Crise

இதேவேளை, வருமானம் கூடியவர்களிடம் இருந்து பெறப்படும் வரியானது, வருமானம் குறைந்த மக்களின் நலன்களுக்காக சென்றடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த புதிய வரிச் சீர்திருத்தங்கள் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுவானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்