உடைந்தது தமிழரசுக்கட்சி?? தகப்பனை திட்டித்தீர்த்த மாவையின் மகன்!! கூட்டத்தில் பரபரப்பு

இன்று காலை யாழ்பாணம் மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தொகுதி கிளைச் செயலாளர்களின் மாநாட்டில், வழமைக்கு மாறாக பரபரப்பு ஏற்பட்டதாகவும், குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின் மகன் அமுதன் ஆவேசம் கொண்டு கட்சியின் தலைமைக்கு எதிராக கொட்டித்தீர்த்துவிட்டதாகவும் மாநாட்டில் கலந்துகொண்ட பலர் தெரிவிக்கின்றார்கள்.

வழமையாகவே இதுபோன்ற தமிரசுக்கட்சியின் கூட்டங்களில் தலைவர் பேசுவார்.. அல்லது தன்னைப் பேச்சாளர் என்று சொல்லித்திரிகின்ற ‘முந்திரிக்கொட்டை’ பேசுவார்.. அல்லது எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் 200 வார்த்தைகளை புகுத்தி தனக்கும் விளங்காமல் மற்றவர்களுக்கும் புரியாமல் பேசுகின்ற சில பெரிசுகள் உளறுவார்கள்.

அவ்வளவுதான் நடக்கும்.

மற்றவர்கள் ஒப்புக்கு ஓரிரண்டு வார்த்தைகளை உதிர்த்துவிட்டு, சிரிச்சுக்கொண்டு வீடு திரும்பி முகப்புத்தகத்தில் அரசியல்செய்யத் தொடங்கிவிடுவார்கள்.

வளமைக்கு மாறாக இன்று நடந்த கூட்டத்தில் மாவையின் மகனும் தமிழரசுக்கட்சி இளைஞரணியின் முக்கியஸ்தருமான அமுதன் தந்தை என்றும் பார்க்காமல் கட்சியின் தலைமையை வெளுத்துவாங்கிவிட்டாராம்.

யாழ் மேயர் பதவிக்கு யாழ் வர்த்தகர் சங்கம் ஒரு நபரை சிபாரிசு செய்வதற்காக மாவையை அணுகியபொழுது, அதற்கு மாவை தமிழரசுக்கட்சியின் முந்திரிக்கொட்டையின் பெயரைக் கூறி ‘அவரிடம்தான் கேட்கவேண்டும்’ என்று கூறியதாகவும், அதனால் தமிழரசுக்கட்சியின் தலைமை மீது அதிருப்தியடைந்த யாழ் வர்த்தகர் சங்கம் வேறு கட்சியின் பக்கம் போய்விட்டதாகவும் சுட்டிக்காண்பித்த அமுதன், மாவையின் அந்த செயலை பகிரங்கமாகக் கண்டித்ததாக தெரியவருகின்றது.

ஓன்று ‘ஆம்’ என்று தலைமை பதில் கூறியிருக்கவேண்டும்.. அல்லாவிட்டால் ‘இல்லை’ என்று மறுத்திருக்கவேண்டும்.. இரண்டையும் செய்யாமல் எதற்காக கட்சியில் தீர்மானிக்கும் பதவியெதனையும் வகிக்காத மற்றொருவர் மீது கைகாண்பித்தீர்கள்?’ என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

கட்சித் தலைமையின் பலவீனத்தைச் சுட்டிக்காண்பித்த அமுதன் , ‘கட்சி தொடர்ந்து இவ்வாறே வழிநடத்தப்படுமாக இருந்தால், கட்சியைவிட்டு தான் உட்பட பல இளைஞர்களும் வெளியேறவேண்டி ஏற்படும்’ என்றும் எச்சரிக்கைவிடுத்தார்.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் கட்சிக்கு விரோதமாக ‘தமிழரசுக்கட்சியின் முந்திரிக்கொட்டை’ நடந்துகொண்ட விதங்கள் பற்றியும், அதற்கு மறைமுகமாக கட்சியின் தலைமை துணைபோவதுபற்றியும் விமர்சித்ததாகத் தெரியவருகின்றது.

 

இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சி இரண்டுபட்டு உடைந்து சந்திசிரித்து நிற்பதற்கு முந்திரிக்கொட்டையையும், கட்சியின் தலைமையையும் குற்றம்சுமத்தினார்கள்.

இன்று நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பருத்தித்துறைத் தொகுதி செயலாளரும், தென்மாராட்சித் தொகுதிச் செயலாளரும் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரியவருகின்றது.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் கூட்டம் முடிந்தபின்னர் தமக்குள் பேசிக்கொண்ட வாக்கியங்கள் இவைதான்:

‘தமிழசுக்கட்சி கிட்டத்தட்ட இரண்டாகப் பிளவடைந்துவிட்டது. கொழும்பில் இருந்து அந்த ‘முந்திரிக்கொட்டை எதற்காக அனுப்பப்பட்டாரோ அந்த வேலையை சரியாகச் செய்துமுடித்துவிட்டார். முதலில் கூட்டமைப்பை உடைத்துவிட்டு, கடைசியில தமிழரசுக்கட்சியையும் உடைத்துவிட்டார்.

நன்றி :- ஐபிசி

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்