நற்பிட்டிமுனை இரண்டு கட்டங்களாக இலங்கை தமிழரசுக்கட்சி தேர்தல் பிரசாரம்.

 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எதிர்வரும் 2023 ஆம் ஆண்டிற்கான உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டல் அரசியல் கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றது.
இதற்கமைய கல்முனை மாநகர சபைக்குட்பட்ட    நற்பிட்டிமுனை வட்டார  பகுதியில்  கட்சி  மற்றும்  வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில்  மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (29) அரசியல் கருத்தரங்குகளை நடாத்தியதுடன் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உட்பட நிதான்சன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டு மக்களுக்கு குறித்த தேர்தல் முறைமை  தொடர்பாக  தெளிவுபடுத்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்