தேசிய சுதந்திர தினத்தை புறக்கணிக்குமாறு யாழ் மாநகரம் முழுவதும் சுவரொட்டிகள்

தேசிய சுதந்திர தினத்தை புறக்கணிக்குமாறு யாழ் மாநகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஊழலை ஒழிக்கும் வரை எந்த தேசமும் சுதந்திரம் அடையாது என்றும், அன்றைய தினம் சுதந்திர தினத்தை புறக்கணித்து கறுப்புக்கொடி ஏற்றுமாறும் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நடத்தப்படும் போராட்டங்களில் மக்கள் கலந்து கொள்ள வேண்டுமெனவும், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்தப் போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.