மெட்ரோ கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் பணிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை

ஏனைய சர்வதேச நகரங்களுக்கு இணையாக கொழும்பை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் வகையில் மெட்ரோ கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் பணிகளை துரிதப்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்..

இத்திட்டத்தின் எஞ்சிய பணிகளுக்காக இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 457 மில்லியன் ரூபா நிதியில் இதுவரை 99 வீதமான திட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், மெட்ரோ கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 55 உப திட்டங்கள் உள்ளன. நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை நில மீட்புக் கூட்டுத்தாபனம் மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியன இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை, தெஹிவளை-கல்கிசை மாநகர சபை மற்றும் கொலன்னாவ மாநகர சபை ஆகியவை இத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படும். மூன்று நீரேற்று நிலையங்களின் பணிகள்; இத்திட்டத்தின் கீழ் அம்பத்தளை நீர் நீரேற்று நிலையம், புனித செபஸ்தியன் வடக்கு பூட்டு கதவுகள் மற்றும் நீரேற்று நிலையம் மற்றும் புனித செபஸ்டியன் தெற்கு நீரேற்று நிலையம் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் புதிய முத்துவெல்ல சுரங்கப்பாதை மற்றும் டொரிங்டன் சுரங்கப்பாதையும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கால்வாய்களை மேம்படுத்துதல் மற்றும் கால்வாய் மாற்றுத் திட்டங்கள் மற்றும் ஈரநிலப் பூங்காக்களின் மேம்பாடு ஆகியவை இதன் கீழ் செய்யப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.