தேர்தல் வேண்டாம் -தேர்தல் ஆணைக்குழு முன் போராட்டம்

இந்த நேரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தக் கூடாது எனக் கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


ஐக்கிய லங்கா கட்சி இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது பொருத்தமானதல்ல என கட்சியின் செயலாளர் தீபால் ரொட்ரிகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை மனுவும் அளித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் அவைத் தலைவர்கள் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியாதவர்கள் என்றும், பொதுத் தேர்தலை உடனடியாக நடத்தி புதிய ஆட்சியை அமைக்க பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பொதுத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படும் புதிய அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.