2023 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடை தேவையில் 70% சீனா வழங்கியுள்ளது -சுசில்

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை தேவையில் 70% சீனாவினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இந்த நன்கொடையின் முதலாவது தொகுதி தற்போது நாட்டிற்கு வந்துள்ளது.

பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் கல்வியின் தரமும் மேம்படுத்தப்பட வேண்டும்.

இதற்கான நடைமுறை திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களிடம் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை புகுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்