கரிநாளாகும் சுதந்திரதினம் வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி பாரிய மக்கள் பேரணி!!

‘வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி தமிழர் தேசமே எழுந்துவா’ என்ற கருப்பொருளில் இலங்கையின் சுதந்திர நாளான பெப்ரவரி 4 ஆம் திகதி கரிநாள் பேரணி இடம்பெறவுள்ளது.

வடக்கு – கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகும் இந்த பேரணி மட்டக்களப்பில் 7ஆம் திகதி நிறைவுறும்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைக்காக பல்கலை மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் பேரணி ஒழுங்கமைக்கப்படவுள்ளது.

பேரணிக்கான ஆதரவு கோரி சிவில் சமூகத்தினர், மாணவர்கள், மதத் தலைவர்கள், பல தரப்பட்டவர்களையும் மாணவர் ஒன்றியத்தினர் மாவட்டம் தோறும் சந்தித்து வருகின்றனர்.

தமிழர் தேசமே எழுந்துவா - கரிநாளாகும் சுதந்திரதினம்..! பாரிய மக்கள் பேரணி | Sri Lanka Independence Day Protest 2023

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலிலிருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி வரையில் முதல் நாள் பேரணி நடைபெறும்.

மறுநாள் 5ஆம் திகதி கிளிநொச்சியிலிருந்து பேரணி ஆரம்பமாகி மாங்குளம் சந்தியைச் சென்றடையும்.

அதேநேரம் மன்னார் மற்றும் வவுனியாவிலிருந்து புறப்படும் பேரணிகளும் மாங்குளம் சந்தியை வந்தடையவுள்ளன.

சகல பேரணிகளும் ஒன்றிணைந்து அங்கிருந்து புறப்பட்டு முல்லைத்தீவில் இரண்டாம் நாளை நிறைவு செய்யும்.

மூன்றாம் நாள் – பெப்ரவரி 6ஆம் திகதி – முல்லைத்தீவிலிருந்து புறப்படும் பேரணி, தமிழர் தாயகத்தின் சிங்கள ஆக்கிரமிப்பு பிரதேசமான தென்னமரமாவடி ஊடாகச் சென்று திருகோணமலையைச் சென்றடையும்.

நான்காவது இறுதி நாளுமான பெப்ரவரி 7ஆம் திகதி திருகோணமலையிலிருந்து புறப்படும் பேரணி மட்டக்களப்பு காந்தி பூங்காவைச் சென்றடைந்து அங்கு நிறைவடையும்.

இதன்போது அம்பாறை மாவட்டத்திலிருந்து புறப்படும் பேரணியும் அங்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.