வேலன் சுவாமியின் வழக்கு விசாரணை தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி உட்பட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகளுக்காக வழக்காளிகள் சார்பில் தமிழரசு கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி தவராசா முன்னிலையாகியிருந்தார்.

கடந்த 15 ஆம் திகதி சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட போது போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின் வழக்கு விசாரணை யாழ் நீதிமன்ற நீதவான்  A.A.ஆனந்த ராஜா தலைமையில் இன்று இடம் பெற்றது.

விசாரணை மேற்கொண்ட நீதவான் வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். அதேவேளை,  போராட்டத்தில் ஈடுபட்டு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன் சோமபாலன், வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டஉ றவினர் சங்க செயலாளர் ஜெனிற்றா ஆகியோர் இன்று மன்றில் முன்னிலையான நிலையில் தலா ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மன்றில் முன்னிலையாகிய இருவரையும் காவல்துறையிடம் வாக்குமூலம் அளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.