விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக நசுக்கப்பட வேண்டும் என்பதனை சம்பந்தன் விரும்பினார்- சிறிகாந்தா தெரிவிப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக நசுக்கப்பட வேண்டும் என்பதனை சம்பந்தன் உள்ளூர விரும்பினார் என தமிழ்த்தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அவரது இறுதி நாட்களில் இதனை கூற வேண்டியது எனது கடமை எனவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

அண்மையில், சாவகச்சேரியில் இடம் பெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“இறுதி யுத்தத்தின் போது, குழந்தைகள், பெண்கள் தொடக்கம் முதியவர்கள் வரை விமான குண்டு வீச்சிற்கும், ஷெல் தாக்குதல்களுக்கும் பலியாகி கொண்டிருந்த பொழுது 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவிலே, தலைவராக இருந்தார்.

விடுதலைப்புலிகள் நசுக்கப்பட வேண்டுமென்றே விரும்பினார் சம்பந்தன் - 13 வருடங்களின் பின்னர் பகிரங்கம்! | Sampanthan Wanted The Ltte To Be Crushed

அவ்வேளை, எமது 22 எம்பிக்களும் பல்வேறு நாடுகளில் செயலாற்றி வரும் நிலையில் ராமதாஸ் எங்களை டெல்லிக்கு அழைத்து, இந்திய நாடாளுமன்றில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க வைத்தார். அந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தியிருந்தால், நான் திட்டவட்டமாக கூறுகின்றேன் யுத்தம் கட்டாயம் நிறுத்தப்பட்டிருக்கும்.

அதுமட்டுமன்றி, இலங்கையில் இடம்பெற்றுவரும் யுத்தத்தினை நிறுத்த வேண்டும் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, இந்திய நாடாளுமன்றிலுள்ள அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் பகிரங்க வேண்டுகோளாக விடுத்து, தனித்தனியாக சந்திக்கும் ஆவலோடு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டொக்டர் இராமதாஸ், ஒரு கடிதத்தை  எமக்கு அனுப்பி அந்த கடிதத்தை கையொப்பமிட்டு மீண்டும் தனக்கு அனுப்புமாறும் கோரிக்கை விடுத்தார்.

அதனை கையொப்பமிட்டு மீண்டும் அனுப்புமாறும், அதனை ஆவணப்படுத்துமாறும் கூறிய போதும் குறித்த கடிதம் கிடைத்தது என்று கூட பாட்டாளி மக்கள் கட்சி தலைவருக்கு சம்பந்தன் அறிவிக்கவில்லை” எனவும் காலம் கடந்து உண்மைகளை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.