வவுனியா மாவட்ட உள்ளூராட்சி வாக்காளர்களும் வேட்பாளர்களும் தேர்தல் களமும் சூடுபிடித்திருக்கின்றது. ஆனால் குறித்த திகதியில் தேர்தல் நடைபெறுமா?
January 31st, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டது.
நாடு முழுவதுமான உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பம் இது. தேரதல் களமும் சூடுபிடித்திருக்கின்றது. இவ்வேளையில் வாக்காளர்களும் வேட்பாளர்களும் சுறுசுறுப்பாக செயல்படுகின்றனர்.
நாட்டிலேயே அதிக வேட்பாளர்களை களமிறங்கிய உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை சமர்ப்பிக்கும் தினம் கடந்த சனிக்கிழமை. 21. முடிவடைந்துள்ளது.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவற்றின் பதவிக்காலம் – மேலதிகமாக ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டது. உள்ளூராட்சி சபைகளின் பதவிக்கலத்தை மேலதிகமாக ஒரு வருடத்தினால் மட்டும் நீடிக்கும் அதிகாரம் அதற்குப் பொறுப்பான அமைச்சருக்கு உள்ளது. .
இவ்வாறான நிலையில் இலங்கையில் மொத்தமாக 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றுள்,
· மாநகர சபைகளின் எண்ணிக்கை – 24
· நகர சபைகளின் எண்ணிக்கை – 41
· பிரதேச சபைகளின் எண்ணிக்கை – 276 மொத்தமாக 8,356 உறுப்பினர்களைத் தெரிவு செய்யப்படவதற்காக இலங்கையில் உள்ள 38259 கிராமங்களின் இச் சபைகளுக்கான நாட்டைக் கட்டியெழுப்பும் மகத்தான பணிக்கு வாக்குரிமையின் மூலம் பங்களிப்புச் செய்வதற்கான சந்தர்ப்பமாகவே இத் தேர்தலை நோக்க வேண்டிய தார்மிக கடப்பாடு எமக்கு உண்டு .
நமது தாய் நாட்டில் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நல்லாட்சிக்கான அடித்தளத்தை இடுவதற்கும் இந்நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள ஓர் அரிய சந்தர்ப்பமாக நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலைக் குறிப்பிடலாம் என்றால் அது மிகையாக மாட்டாது. தேர்தலுக்கான திகதியை தேர்தல்ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும் , தேர்தலை அரசாங்கம் ஒத்திவைக்கும் என்கிற பரவலான பேச்சுகள் அரசியலரங்கில் எழுந்துள்ளன. உள்ளூராட்சித் தேர்தலை ஒத்தி வைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பொருளாதார நெருக்கடி நிறைந்துள்ள தற்போதைய காலகட்டத்தில் – தேர்தலை நடத்துவது, பாரிய அழிவுக்கு வழிவகுக்கும் எனக் பலராலும் முணுமுணுக்கப்படுகின்றது. இந்தத் தேர்தல் திருவிழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் அரங்கேறுவதற்க்கு வாய்ப்புகள் உண்டு. .
இதேவேளை தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களையும் மேடைகளில் அமர வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்வது வாடிக்கையான விஷயம்
தேர்தல்வந்துவிட்டால் கட்சிகளும் வேட்பாளர்களும் நூதனமான பிரச்சாரத்தில் ஈடுபடுவதுவழக்கம். மேடைக்கு வரும் வேட்பாளர்கள் மணலை கயிறாக திரிப்போம், வானத்தை வில்லாக வளைப்போம் என்பதுபோல் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள்.பின்னர் வாக்குறுதிகளைப் பற்றி வென்றவரும் கவலைப்படுவதில்லை, ஓட்டுப் போட்டவர்களும் கேள்வி கேட்பதில்லை. அது அவ்வாறு இருக்க நாட்டில் தற்போதுள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிககை அதிகம் என்றும், அதனால் அதனை அரைவாசியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். தற்போது நாடு முழுவதும் 8,690 உள்ளூராட்சி உறுப்பினர்கள் உள்ளனர்.
உறுப்பினர் தொகையைக் குறைக்கும் பொருட்டு, தற்போதுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டாரங்களின் எண்ணிக்கையினையும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில், உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக ஜனாதிபதி எடுத்துள்ள இவ்வாறான முயற்சிகள், ‘தேர்தலை ஒத்தி வைப்பதற்கான தந்திரம்’ எனவும் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தற்போது நாட்டின் பொருளாதார நிலை வீழ்ச்சியடைந்துள்ளமையினை கரணமாக கூறி,
உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையினை குறைக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். ஆனால் தேர்தலைப் பிற்போடும் உள் நோக்கமும் இதில் உள்ளது என்பது ஊகிக்கலாம் இவ்வாறான நிலையில் வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இச் சபைகளுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் பிரச்சாரம் வவுனியாவில கலைகட்டியுள்ளது. மொத்த உள்ளூராட்சிசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை103 இதில் வவுனியா மாநகர சபை உறுப்பினர்கள் 20 ம்.வவுனியா வடக்கு பிரதேச சபை 23 ம்.வெங்கலச்செட்டிக்குளம்பிரதேச சபை 18ம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை 26ம்.வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை 16ம் ஆனால் இதற்காக போட்டியிட 1597 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கள் செய்திருந்தார்கள். இவற்றில் 17வேட்புமனு நிராகரிக்கப்பட்டு 1580 வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டு வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர். அதே வேளை. இம்முறை 1,26 915 வாக்காளர்கள் வாக்களிக்க பதிவு செய்யப்பட்டுள்ளார்கள். அதன்படி வவுனியா மாநகர சபை க்கு உட்பட்ட வாக்காளர்கள 20,846ம்..வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வாக்காளர்கள 14,533ம்.வெங்கலச்செட்டிக்குளம் பிரதேசசபைக்கு உட்பட்ட வாக்காளர்கள .18,472ம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்கு உட்பட்ட வாக்காளர்கள 61,647ம்.வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபைக்கு உட்பட்ட வாக்காளர்கள் 11,417ம் இம்முறை வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இதற்காக தேர்தலில் வாக்காளர்கள வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொழுது வாக்காளர்கள ஒரு சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் .
ஒருவரின் இருப்பை அழித்துவிட்டு அந்த கல்லறையில் ஏறி நின்று போலி வசனம் கதைப்பவர்களை நாம் அடையாளம் காண வேண்டும்.
தோல்வி பயத்தில் மற்றவர்களை வீழ்த்த விமர்சிக்காமல் நாம் செய்ததைப்பற்றி செய்வதை பற்றி நேரத்தில் பேசி நம்மை நாம் நிறையவே வளர்க்கலாம். ஏற்கனவே காணப்படும் வேறுபாடுகளை மீண்டும் ஏற்படுத்தும் விதமாகவோ அல்லது அதிகப்படுத்தும் விதமாகவோ செயல்படுதல் அல்லது சதி, சமுக, மத அல்லது மொழி அடிப்படையில் பல்வேறு தரப்பினரிடையே வெறுப்புணர்வு அல்லது இறுக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவோ அல்லது அதிகப்படுத்தும் விதமாகவோ செயல்படுதல் கூடாது.
* பிற வேட்பாளரது குணம் அல்லது நடத்தை குறித்து அவரது தேர்தல் வெற்றி வாய்ப்பினைப் பாதிக்கும் நோக்கோடு விமர்சித்தல் கூடாது. நீங்கள் வெற்றிபெற உங்களது சேவையைப் கூறுங்கள்
*ஏமாற்று, மோசடிகளில் சம்பந்தப்படாத, , முறைகேடான வழிகளில் பொருளடலில் ஈடுபடாத, நன்னடத்தையும் நல்லொழுக்கமும் உடையவர்களுக்கே எமது வாக்குகள ;அளிக்கப்பட வேண்டும்.
*நாட்டை நேசிக்கின்ற, சமூகப்பற்றுளள், ஊரைக் கட்டியெழுப்பும் உணர்வும் வல்லமையும் கொண்டவர்களாக எமது வாக்குகளைப் பெறுபவர்கள் இருப்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொளள் வேண்டும்.
*பதவிகளைப் பெறுவதற்கும் வருமானம் ஈட்டுவதற்குமான வழியாகஅரசியலைக் கருதாமல் அதனை ஓர் உயர் சமூகப் பணியாகக் கருதி செயற்படுபவர்களாக எமது தெரிவுக்குரியவர்கள் அமைதல் வேண்டும்.
* நேரடியாக அல்லது மறைமுகமாக குழப்பத்தையோ அல்லது வன்முறையையோ ஏற்படுத்துவது கூடாது.
* எந்தவொரு வேட்பாளர் போட்டியிடுவதையும் தடுத்தல், எந்த ஒரு வாக்காளரையும் வாக்களிக்குமாறு அல்லது வாக்களிக்காமல் இருக்குமாறு வற்புறுத்துதல் அல்லது சக வேட்பாளரை விலகி கொள்ளுமாறு வற்புறுத்துவது ஆகிய சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது.
*நாட்டுச்சட்டங்களை மீறுகின்ற, வன்முறைகளில் ஈடுபடுகின்ற வேட்பாளர்கள் நிராகரிக்கப்படல் வேண்டும்.
*இன, மத வாதங்களைத் தூண்டும் வகையில் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளைமுன்னெடுப்போருக்கு வாக்குகள் அளிக்கப்படலாகாது.
Ø*மாற்று அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் தூஷிக்கின்ற, அவமதித்துப் பேசுகின்ற, பண்பாடற்ற வேட்பாளர்களும் எமது தெரிவுக்குரியோர் அல்லர்.
சுருக்கமாகச் சொல்வதாயின், எமது வாக்குகள ; ஏக காலத்தில் நல்லவராகவும் வல்லவராகவும் விளங்குகின்ற வேட்பாளர்களுக்கு வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்திக் கொளளு;ம் கடப்பாடு நம் அனைவருக்கும் உண்டு.சிறந்த முன்னுதாரண புருஷர்களாக அவர்கள் திகழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
இந்த நிலையில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பலருடன் பேசியபோது, அவர்களில் மிக அதிகமானோர், தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதற்கானசாத்தியங்களே அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்
கருத்துக்களேதுமில்லை