உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும்-விற்பனையும்.

வடக்கு மாகாண தேசிய அருங்கலைகள் பேரவையின் ஏற்பாட்டில் 27/01 வெள்ளிக்கிழமை சாவகச்சேரி-மகிழங்கேணி கிராமத்தில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் (பன்னை வேலை) கண்காட்சியும்-விற்பனையும் இடம்பெற்றது.
கடந்த ஆறு மாத காலமாக தேசிய அருங்கலைகள் பேரவையினால் மகிழங்கேணி-திருவள்ளுவர் சனசமூக நிலையத்தில் கிராமத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு பன்னை வேலை பயிற்சிநெறி முன்னெடுக்கப்பட்ட நிலையில் பயிற்சி நெறியின் இறுதி நாளில் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
குறித்த நிகழ்வில் சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன்,நகரசபை உறுப்பினர் சுபோதினி மற்றும் அருங்கலைகள் பேரவையினுடைய பயிற்றுவிப்பாளர் மேனகா உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
உதயசூரியன் மற்றும் மகிழங்கேணி கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக குறித்த பயிற்சிநெறி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்