பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு ….‌‌‌…

இலண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் நீம் நிறுவன அனுசரணையில் வடகிழக்கு பகுதியில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக இன்று(31.01)வவுனியாவில் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நீம் நிறுவனத்தின் செயலாளர் ஓய்வுநிலை பீடாதிபதி கு.சிதம்பரநாதன் தலைமையில்
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நீம் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டியும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவாகிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் ஊக்குவிப்பு தொகையும் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நீம் நிறுவன தலைவர் நிதர்சன் உட்பட பல அதீதிகள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திர கலந்து சிறப்பித்ததுடன் பிரதேச செயலாளர்கள் உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் நிறுவனத்தின் உறுப்பினர்கள் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்