எதிர்கட்சித் தலைவரின் அதிரடி அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஆட்சியாளர்களைப் பற்றி சிந்திக்காமல், இந்நாட்டு மக்களைப் பற்றி சிந்தித்தே அவற்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்ய மாட்டேன் என தாம் ஒருபோதும் கூறவில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டுக்கு தீங்கு விளைவிக்காத பிரகாரமே எந்தவொரு அமைப்பையும் கையாள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அம்பாறையில் நேற்று (31) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை