க.பொ.த சா/த பரீட்சைக்கு இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
2022 க.பொ.த சாதாரண தர பரீட்சைகளுக்கான விண்ணப்பத்தை இணைய வழியில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைத் திணைக் களம் அறிவித்துள்ளது.
மேலும் பெப்ரவரி 1 முதல் பெப்ரவரி 28 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை