காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊடகவியலாளர் நிபோஜனுக்கு அஞ்சலி

விபத்தில் உயிரிழந்த ஊடகவியலாளர் எஸ். என். நிபோஜனுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் 2171ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் வவுனியா பிரதான தபாலகத்துக்கு அருகில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது அன்னாரின் உருவப்படத்துக்கு தீபமேற்றியும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

கிளிநொச்சி பிராந்திய ஊடகவியலாளரான எஸ்.என். நிபோஜன் கடந்த 30.01.2023 தெஹிவளையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.