வெளிநாட்டு மாலுமிகள் இருவர் இலங்கை கடற்பரப்பில் உயிரிழப்பு!

வெளிநாட்டு மாலுமிகள் இருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காலி துறைமுக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எகிப்தில் இருந்து இந்தியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பலில் பணிபுரிந்த இரு மாலுமிகள் சர்வதேச கடலில் உயிரிழந்துள்ளதாக நேற்று (01) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

41 மற்றும் 53 வயதுடைய இரண்டு உக்ரைனியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த கப்பல் தற்போது காலி துறைமுகத்திற்கு அருகில் இந்நாட்டு கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தோர் தொடர்பான தகவல்கள் காலி நீதவானிடம் தெரிவிக்கப்பட்டு சடலங்களை தரையிறக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்