ஜனாதிபதியிடம் கலந்துரையாட தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை!

புதிய உள்ளுர் வரிச் சட்டத்தின் பாதகமான விளைவுகள் குறித்து ஜனாதிபதியிடம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு தொழில் வர்க்கத்தினரின் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரியுள்ளது.

இதற்காக, தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில் இணைந்த 27 தொழிற்சங்க பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

இக்கடிதத்தின் மூலம், புதிய உள்நாட்டு வருவாய்ச் சட்டத்தின் எதிர்மறையான விளைவுகளை மையமாக வைத்து, இந்த வரிக் கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டால், இந்த வரிக் கொள்கைகள் நீடிக்க முடியாததாகவும், மூளைசாலிகள் வெளியேற்றத்தை அதிகரித்து, சரிந்த பொருளாதாரத்தை மேலும் சுருங்கச் செய்யும் என்றும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தின் பிரகாரம், புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் தொடர்பில் சங்கத்தின் மூன்று முக்கியப் பகுதிகளை அவர்கள் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, வரிவிதிப்பு வரம்பு மிகவும் குறைவாக உள்ளமை, குறைந்த வரி அலகு மதிப்புகளுடன் கூடிய அதிக வரி சதவீதங்கள் மீதான வரிவிதிப்பு மற்றும் தொழில் இருந்து பெறும் வேதனம் மற்றும் வணிகத்தின் லாபம் ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு இல்லாமை என்பவற்றை தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்