இன்று அனைத்து கட்சி அமைப்பாளர்களையும் கொழும்பிற்கு வரவழைத்த பசில்!

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தமது கட்சியின் அனைத்து ஆசன அமைப்பாளர்களையும் இன்று கொழும்புக்கு அழைத்துள்ளார்.

இன்று காலை பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் ஒன்று கூடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்