சிறைக் கைதிகள் இருவர் தப்பியோட்டம்!

மொரவக்க நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று (1) சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச் சென்றதாக மேலதிக சிறைச்சாலை ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

தப்பிச்சென்ற கைதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்ககைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்