அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரியாக சவேந்திர சில்வா சாதனை !

இலங்கை ஆயுதப் படைகளின் வரலாற்றில் அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரி என்ற பெருமையைப் படைகளின் தலைமையதிகாரி சவேந்திர சில்வா பெற்றுள்ளார்.

75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முப்படைகளின் தலைமை தளபதி என்ற வகையில், முப்படைகளின் 77 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு களங்கமற்ற சேவையை அங்கீகரிக்கும் மதிப்புமிக்க விஷிஷ்ட சேவா விபூஷணயா (விஎஸ்வி) விருதை வழங்கினார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கௌரவமான நிகழ்வின் போது இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வின் போது, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுதந்திர தினப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.

விஷிஷ்ட சேவா விபூஷணயா பதக்கம் ஒரு சிறப்பு விருது மற்றும் லெப்டினன்ட் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

கேர்னல். மற்றும் அதற்கு மேல் இராணுவத்தில் உள்ளவர்கள் மற்றும் கடற்படை மற்றும் விமானப் படையில் ஒரே மாதிரியான பதவிகளை வகிக்கும் அதிகாரிகள், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவை மற்றும் கறைபடாத சேவைப் பதிவைக் கொண்டவர்கள், இந்த விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள்.

இந்தநிலையில் இன்று பெற்றுக்கொண்ட பதக்கத்துடன் ஜெனரல் சில்வா தற்போது மொத்தம் 20 வெவ்வேறு மதிப்புமிக்க பதக்கங்களை வைத்துள்ளார். 2015இலும் அவர் வி.எஸ்.வி பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.