இலங்கைக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா வழங்குகிறது

இலங்கைக்கு மேலும் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

850 அரச பாடசாலைகளின் 96,000 பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்காக மேலதிகமாக 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என இலங்கைக்கு வருகைத் தந்துள்ள அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 770 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் மற்றும் தாவர எண்ணெய் விநியோகத்தை அமெரிக்கா தொடங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு வருடத்தில் இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கம் 240 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆதரவை வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற கடன் வழங்குநர்களுடன் இலங்கை பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.