சுதந்திர தினத்தைப் பயன்படுத்தி இணைய மோசடி: Fact Crescendo Sri Lanka எச்சரிக்கை

சுயாதீன உண்மைச் சரிபார்ப்பு இணையத்தளமான Fact Crescendo Sri Lanka இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய சமூக ஊடகங்களில் போலியான இணையத் தரவு மோசடிகள் தொடர்பில் பொதுமக்களை எச்சரித்துள்ளது.


Fact Crescendo Sri Lanka ஒரு டுவிட்டர் செய்தியில், ‘இலவச தரவு’ மோசடி இணைப்புகளைக் கிளிக் செய்வதையும் சரிபார்க்கப்படாத செயலிகளை நிறுவுவதையும் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

நாளைய சுதந்திர தினத்தைக் கருத்தில் கொண்டு பரப்பப்பட்ட போலி தரவு மோசடி பற்றிய விபரங்களையும் நிறுவனம் பகிர்ந்து கொண்டது.


இவ்வாறான போலி மோசடிகளால் தனி நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் அம்பலமாகும் அபாயம் இருப்பதாக Fact Crescendo Sri Lanka எச்சரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.