ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்- ரணில்

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் இன்றைய நிலைமை மற்றும் அதிலிருந்து மீள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்தார்.

“நான் இன்று பாரம்பரிய சுதந்திர தின உரையை ஆற்றவில்லை. இன்று இழந்த சுதந்திரத்தை மீட்பதற்காக பேசுகிறேன். இன்று பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். இவ்வளவு பாரதூரமான சூழலை இதற்கு முன் நாம் சந்தித்ததில்லை. எமக்கு ஏன் இப்படி நடந்தது? நாம் உண்மையை பேசுவோம். இந்த நிலைமைக்கு நாம் அனைவரும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பொறுப்பேற்க வேண்டும். நாம் யாருக்கும் ஒருவரை ஒருவர் விரல் நீட்டி குற்றம் சாட்ட முடியாது. ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் தவறு செய்துள்ளோம்.”

வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதற்காக அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது. காணி விடுவிப்பு, கைதிகளின் விடுதலை போன்ற நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இந்த நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.