சர்வதேசமே பார்த்து சிரிக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்கும் முட்டாள் தமிழ்த் தலைவர்கள்!

சிங்கள மக்களே தங்களின் தலைவர்களால் ஏமாறுவதற்கு தயாரில்லை என்ற நிலைக்கு வந்துள்ள போதும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முட்டாள் தமிழ் தலைவர்கள் அதனை விளங்கிக்கொள்ளாமல் நிபந்தனை இல்லாத ஆதரவை கொடுத்து வருகின்றனர் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக கருப்புக்கொடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“சிங்கள மக்களே தங்களுடைய தலைவர்களால் கொண்டாடப்படுகின்ற சுதந்திர தினக் கொண்டாடங்களை புறக்கணித்துள்ள நிலையில், இன்று அதை பார்த்து சர்வதேசம் சிரிக்கும் என்பதை ரணில் விக்கிரமசிங்க விரைவில் விளங்கிக்கொள்வார்.

இவ்வாறான நிலையிலேயே தமிழ்த் தலைவர்கள், நிராகரிக்கப்படுகின்ற தரப்புக்களுக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர்” என  கஜேந்திரகுமார் குற்றம் சுமத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.