மீண்டும் பிரதமராகும் முன்னாள் அதிபர் – மொட்டுக் கட்சிக்குள் கருத்து முரண்பாடு!

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் நாட்டின் பிரதமராக நியமிப்பதற்கு ஆளுங்கட்சிக்குள் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என அண்மையில் ஊடகங்கள் பலவும் செய்திகள் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

மகிந்தவை பிரதமராக நியமிப்பது தொடர்பான ஆளுங்கட்சி கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றுள்ளதாகவும், இதுவரையில் அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

மீண்டும் பிரதமராகும் முன்னாள் அதிபர் - மொட்டுக் கட்சிக்குள் கருத்து முரண்பாடு! | Mahinda Rajapaksa Prime Minister Again Sri Lanka

மேலும், பிரதமருக்கான சிறப்புரிமையை குறைவாக அனுபவித்து வரும் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன சில சமயங்களில் பிரதமர் பதவியை மகிந்தவிடம் ஒப்படைக்கலாம் என சொல்லப்படுகின்றது.

இதேவேளை, பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமிப்பதில் பொதுஜன பெரமுனவிற்குள் கருத்து முரண்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.