யாழில் சிங்கக் கொடியுடன் இளைஞர்கள் குறளி வித்தை – கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையினர்

இலங்கையின் தேசியக் கொடியான வாளேந்திய சிங்கத்தை தமது உந்துருளி, முச்சக்கர வண்டி என்பவற்றில் கட்டியவாறு யாழ். நகரப் பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஒரு சிறுகும்பல் பயணித்துள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரால் சுதந்திரதின கொண்டாட்டம் எனும் பெயரில் அழைத்து வரப்பட்ட சிறு கும்பலே யாழ். நகரப் பகுதியில் இவ்வாறு குறளி வித்தை காட்டியுள்ளது.

இலங்கையின் சுதந்திர நாள் கொண்டாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையின் தேசியக் கொடியுடன் உந்துருளிகளில் வீதி முழுவதையும் ஆக்கிரமித்து வந்த சமயம் அந்தக் கும்பலோடு முச்சக்கர வண்டிகளும் ஆபத்தான முறையில் வித்தைகளை காட்டியவாறு பவனி வந்துள்ளன.

யாழில் சிங்கக் கொடியுடன் இளைஞர்கள் குறளி வித்தை - கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையினர் | Sri Lanka Independence Day 2023

சுதந்திரதின கொண்டாட்டம் எனும் பெயரில் குறித்த கும்பல் மேற்கொண்ட நடவடிக்கைளை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டது.

யாழில் சிங்கக் கொடியுடன் இளைஞர்கள் குறளி வித்தை - கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையினர் | Sri Lanka Independence Day 2023

யாழில் சிங்கக் கொடியுடன் இளைஞர்கள் குறளி வித்தை - கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையினர் | Sri Lanka Independence Day 2023

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.