சீனா தனது கொள்கைகளை மாற்ற வேண்டும் – IMF பணிப்பாளர் கோரிக்கை

குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கடனை செலுத்த முடியாததால், சீனா தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெறும் கூட்டத்தில் பாரம்பரிய கடன் வழங்குபவர்களையும், சீனா, சவூதி அரேபியா, இந்தியா போன்ற புதிய கடன் வழங்குநர்களையும், அதேபோன்று தனியார் துறையினரையும் பங்கேற்க வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெப்ரவரி பிற்பகுதியில் கடன் வழங்குநர்கள் மற்றும் சில கடன் வாங்கும் நாடுகளுடன் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

குறித்த தகவல்களை சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா CBS 60 நிமிட பேட்டி நிகழ்ச்சியில் நேற்று (05) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.