குழந்தைகளை தாட்ட நிலத்தில் இராணுவம்..! எமது அன்னை பூமியோடு மாவீரர் துயிலுமில்லங்களையும் மீட்க வேண்டும்

எங்களுடைய குழந்தைகளை தாட்ட நிலத்தில் இராணுவம் முகாமிட்டு உள்ளதாகவும் நங்கள் அவர்களின் நினைவாக வீதிகளில் விளக்கு ஏற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி மக்கள் எழுச்சி பேரணியில் கலந்து கொண்ட தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி மக்கள் எழுச்சி பேரணியானது அலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செய்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிலத்தை மீட்க வேண்டும் என்றும், எமது அன்னை பூமியோடு ஒட்டுமொத்த மாவீரர் துயிலுமில்லங்களையும் மீட்க வேண்டும் எனவும் அதற்கு ஒட்டுமொத்த தமிழர்களையும் அணி திரள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

குழந்தைகளை தாட்ட நிலத்தில் இராணுவம்..! அன்னை பூமியை மீட்க வேண்டும் - வீரத்தாயின் உரிமைக்குரல் | Black Day Protest Sri Lanka Tamil

 

மேலும், அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்றும், ஒரு கை தட்டி ஓசை வாராது என்றும் அனைத்து தமிழர்களையும் இந்த போராட்டத்தில் ஒன்றிணையுமாறும் கேட்டுக்கொண்டார்.

தமிழினத்திற்கு விடிவு வேண்டும் என்றால் அனைவரும் ஒன்று சேர்வது அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.