லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு

நேற்றைய தினம் லிட்ரோ நிறுவனம் அதன் அனைத்து சமையல் எரிவாயுவின் விலைகளையும் அதிகரித்ததைத் தொடர்ந்து, தற்போது லாஃப்ஸ் நிறுவனமும் தனது எரிவாயு விலைகளை அதிகரித்துள்ளது.

இன்று, நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த விலைத் திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அனைத்து வகையான லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரித்தது! | Laugfs Gas Cooking Prices Also Increased

12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதற்கமைய அதன் புதிய விலை 5,280 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன் 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதற்கமைய அதன் புதிய விலை 2112 ரூபாவாகும்.

2 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலை 32 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 845 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்