ரயில் – கார் விபத்து; ஒருவர் பலி

இன்று (06) மாலை கம்புருகமுவ பொரொல்ல வீதி புகையிரதக் கடவையில் மாத்தறையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த விரைவு ரயில் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக மாத்தறை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

தெனிப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் புபுது பிரியங்க (41) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட போது அவர் செலுத்திச் சென்ற கார் புகையிரதத்தில் மோதுண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது ஏற்கனவே உயிரிழந்துள்ளார்.

மாத்தறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ரொஷான் ஹெட்டியாராச்சியின் பணிப்புரையின் பேரில் அதிகாரிகள் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.