அரசின் வரிக் கொள்கை: புதன்கிழமை பாரிய போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் தயாராகின்றன

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக பெப்ரவரி 08 புதன்கிழமை கொழும்பில் பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்கள் மற்றும் ஏனைய முக்கிய பிரதேசங்களுக்கு அருகாமையில் இன்றைய தினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) போராட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளது.

வரிக் கொள்கைகளின் நியாயமற்ற தன்மை மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்கவே இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதாக GMOA செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், எனினும் அதிகாரிகள் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

“கிட்டத்தட்ட 40 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க தங்கள் சம்மதத்தை தெரிவித்துள்ளன, இதில் அரசு மட்டுமல்லாது அரை அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் அடங்கும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.