ஒரே நிற துண்டினை தொடர்ந்தும் கழுத்தினில் அணிந்து கொள்ளக்கூடிய கட்சி தமிழரசுக்கட்சி மாத்திரமே- சாணக்கியன்

அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று மாலை ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் (05) நடைபெற்றது.

அம்பாரை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற அறிமுக நிகழ்வில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வேட்பாளர்கள் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அறிமுக நிகழ்விற்கு வருகை தந்த அரசியல் தலைவர்கள் வரவேற்க்கபட்டதுடன் குத்துவிளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

தொடர்ந்து வரவேற்பு மற்றும் தலைமைய உரை இடம்பெற்றதுடன் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச சபைக்;கான 10 வட்டாரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களும் போனஸ் ஆசனங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட 09 வேட்பாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

இதன் பின்னராக அரசியல் தலைவர்களின் உரையும் இடம்பெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்……

.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உரையாற்றுகையில் கட்சிக்கான ஒரே நிற துண்டினை தொடர்ந்தும் கழுத்தினில் அணிந்து கொள்ளக்கூடிய கட்சி தமிழரசுக்கட்சி மாத்திரமே. ஏனைய கட்சிகள் தமது கட்சி துண்டினை தூக்கு போடுவதற்கு மாத்திரமே பயன்படுத்தும் நிலையில் உள்ளனர் என்றார்.  தமிழ் மக்களின் அரசுக்கான கட்சியும் தமிழரசுக்கட்சியே எனவும் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் கட்சியும் அதுவே என்றும் கூறினார்.
கடந்த தேர்தலில் கப்பல் ஒன்றை வாடகைக்கு ஒருவர் எடுத்து வந்து மக்களை ஏமாற்றினார். அவர் இன்று மட்டக்களப்பிற்கு அதனை வாடகைக்காக பெற்று வந்துள்ளார். அம்பாரையில் நடந்தது ஒருபோதும் மட்டக்களப்பில் நடைபெறாது என்றார். இதேநேரம் இம்முறை கப்பலுக்கு பதிலாக படகை ஒருவர் எடுத்து வந்துள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

தமிழரசுக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் உரையாற்றுகையில்   இன்று தமிழ் அரசு கட்சி ஆதரவாளர்கள் இடையே ஒரு குழப்ப நிலை உருவாகியுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக இருந்த நீங்கள் இன்று ஒற்றுமையை சிதறித்து விட்டீர்கள் என எங்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். இயன்றவரை விட்டுக்கொடுத்தோம். அவர்கள் சொல்வது போல் செய்யவும் சம்மதித்தோம். ஆனாலும் அவர்கள் தனியாக பிரிந்து சென்றனர்.அந்த ஒற்றுமையை குலைத்தவர்கள் நாங்கள் அல்ல. அதற்கான தீர்ப்பை மக்கள் வழங்குவர் என்றார்.

இங்கு தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் உள்ளிட்டவர்களும் உரையாற்றினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்