அடுத்த போராட்டத்திற்கு நிச்சயம் தயார்- சஜித் பிரேமதாஸ

தற்போதைய அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்கும் தந்திரோபாயங்களை மேற்கொள்வதாகவும், மக்களின் இறையான்மைக்கு எதிராக அரசாங்கம் நின்றால் அதற்கு எதிரான அடுத்த போராட்டத்திற்கு நிச்சயம் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கெலிஓயவில் இன்று (07) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல்கள் ஒத்திவைக்கப்படும் வரை எதிர்க்கட்சியில் மாற்றுத் தரப்பாக தங்களைக் கூறிக்கொள்ளும் குழுக்களும் இரகசியமாக துணைபோவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய மக்கள் சக்திக்காக முன்நிற்கும் மக்கள் அலைக்கு அவர்களும் அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.

வீழ்ந்த பாதாளத்தில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே குழு யார் என்பது இந்நாட்டிலுள்ள யாருக்கும் தெரியும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அந்தக் குழு ஐக்கிய மக்கள் சக்திக்கு மாத்திரமே இருப்பதாகவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்