காசியப்பனின் குளிர் அரண்மனை திறக்கப்படுகிறது!

சிகிரியாவில் காசியப்ப மன்னன் வாழ்ந்த “குளிர் மாளிகை” வரும் மார்ச் மாதம் முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்படும் என மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வரட்சியான காலங்களில் இந்த குளிர் அரண்மனையை காசியப்ப மன்னன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

சிகிரியா பாறையில் ஏறும் போது தென்படும் நான்கு குளங்களுக்குப் பிறகு, தெற்கே சுமார் 50 மீற்றர் நடந்தால் குளிர் அரண்மனை தெரியும்.

குளிர் அரண்மனையின் இடிபாடுகள் ஒரு குன்றின் மீது காணப்படுகின்றன, ஆனால் அரண்மனையைச் சுற்றியுள்ள பெரிய வடிகால் காரணமாக அதை அணுக முடியாது. இந்த கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிர் மாளிகையை பார்வையிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்