சுகாதார அமைச்சின் அதிரடி முடிவு!

அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை குறுகிய காலத்திற்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

குறுகிய காலத்திற்கு ஒத்திவைக்கக்கூடிய சத்திரசிகிச்சைகளை ஒத்திவைக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அரசாங்க வைத்தியசாலைகளில் அத்தியாவசியமான மற்றும் அவசர சத்திரசிகிச்சைகளை தாமதமின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்