சிவனொளிபாதமலையில் குழந்தை பிரசவித்த பெண்!

சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற பெண் ஒருவர் இடைவெளியில் பெண் குழந்தை ஒன்றை பிரசுவத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவம் நேற்று இரவு (11) நல்லத்தண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊசி ஆறு (இந்திகட்டு பாஹன) பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ள பெண்மணி இரத்தினபுரி மாரபண பகுதியை சேர்ந்த குடுவன ஆராச்சிகே நிராசி தினுசா அபேரத்ன வயது 31 என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்மணி மற்றும் சிசு கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.