2009லேயே முடிவு கட்டிவிட்டோம் – மீண்டும் உயிர்பெற பிரபாகரன் கடவுளா – கோட்டாபய ஆவேசம்!

“உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு வருவதற்கு அவர் என்ன கடவுளா” இவ்வாறு யுத்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றிய முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி பழ நெடுமாறன் தெரிவித்த கருத்திற்கு, ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே முன்னாள் அதிபர் இதனைக் கூறியுள்ளார்.

அவரை முள்ளிவாய்க்காலில் வைத்து சிறிலங்கா படையினர் கொன்று, அவரது சடலத்தை எரித்தது உண்மை எனவும் கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

 

2009லேயே முடிவு கட்டிவிட்டோம் - மீண்டும் உயிர்பெற பிரபாகரன் கடவுளா - கோட்டாபய ஆவேசம்! | Ltte Leader Prabhakaran Death Conform Gotabaya

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டுமல்ல அவரது மனைவி, மகள், மூத்த மகன், இளைய மகன் ஆகியோரும் இறுதி யுத்தத்தில் உயிரிழந்துவிட்டார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி பலர் சுயநல அரசியல் செய்ய முனைகின்றனர், இவ்வாறானவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிப்பது முட்டாள்தனமான செயல்” என முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்